ஐந்து போத்தல் வடிசாராயத்தினை வைத்திருந்த நபருக்கு நீதவான் கொடுத்த உத்தரவு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - வெருகல் பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக 5 போத்தல் வடிசாராயத்தினை வைத்திருந்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரை இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முகம்மட் நயீம் இன்று உத்தரவிட்டுள்ளார்.

பூமரத்தடிச்சேனை, ஈச்சிலம்பற்று பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் அனுமதிப்பத்திரமின்றி வடிசாராயம் வைத்திருப்பதாக சேருநுவர போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers