கந்தளாய் பகுதியில் விபத்தொன்றினை ஏற்படுத்தி விட்டு தலைமறைவாக இருந்த நபர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் விபத்தொன்றினை ஏற்படுத்தி விட்டு தலைமறைவாக இருந்த நபர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிங்ககம, ஹிங்ராக்கொட பகுதியை 34 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றி சென்ற போது வீதியால் சென்ற நபரை மோதி விட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது.

கந்தளாய் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஏ.டபிள்யு.சோமபால என்பவர் சம்பவத்தில் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார் அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி காணொளிகளை சோதனை மேற்கொண்ட நிலையில் சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

Latest Offers