தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் பெறுபேற்றை அதிகரிப்பதற்கான செயற்றிட்டம் முன்னெடுப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா, குறிஞ்சாக்கேணி கோட்ட பாடசாலையின் தரம் 05 மாணவர்களின் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றை அதிகரிப்பது தொடர்பான கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டம் இன்று கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.சனூஸின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 2019ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் குறிஞ்சாக்கேணி கோட்டத்தில் அதிகளவான மாணவர்களை சித்தியடையச் செய்வதற்கு எவ்வாறான முன்னெடுப்புக்களை செய்ய வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் முன்மாதிரியான வலயக் கல்வியாகவும், குறிஞ்சாக்கேணி கோட்டத்தை மாற்றுவதே இதன் நோக்கம் என கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.சனூஸ் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வரா நளீம், குறிஞ்சாக்கேணி கோட்டக் கல்விப் பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள், குறிஞ்சாக்கேணி கோட்ட பாடசாலை அதிபர்கள், கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் தொடர்ச்சியாக சாதாரண தர மற்றும் உயர்தர பெறுபேறுகளை அதிகரிக்கும் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.