இலங்கையின் கட்டுப்பாட்டில் இருந்த ஏழு இந்திய படகுகள் விடுவிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையின் கட்டுப்பாட்டில் இருந்த ஏழு இந்திய படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கரையோர காவல்படையின் உதவியுடன் இந்தப்படகுகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது இந்தப்படகுகள் 2015, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இலங்கையின் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

திருகோணமலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தப்படகுகள், இந்தியாவில் இருந்து வருகைத்தந்த பொறியியலாளர்களால் திருத்தியமைக்கப்பட்டன.

இந்தநிலையில் அவை நேற்று காங்கேசன்துறை கடற்பகுதியில் வைத்து இந்தியாவிடம் கையளிக்கப்பட்டன.

Latest Offers