கொழும்பில் பாலியல் விடுதி முற்றுகை: பல்கலைக்கழக மாணவி கைது

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு - கொள்ளுப்பிட்டி, கிளிபார்ட் ஒழுங்கையில் இரண்டு மாடிகளை கொண்ட ஆடம்பர வீட்டில் இயங்கி வந்த பாலியல் தொழில் விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார், அதனை நடத்தி வந்த சீனப் பெண்ணுடன் பல்கலைக்கழக மாணவி மற்றும் வியட்நாம் நாட்டை சேர்ந்த யுவதியை கைது செய்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸார், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட போதே இந்த பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள வியட்நாம் யுவதி, மூன்று மாத சுற்றுலா வீசா அனுமதியில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை வந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர், குறித்த இடத்தில் பாலியல் தொழில் விடுதி இயங்கி வந்ததுடன் தொழிலில் ஈடுபட்டிருந்த 9 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

சீனாவை சேர்ந்த தம்பதி, இந்த வீட்டை மாதாந்தம் இரண்டு லட்சம் ரூபாய் செலுத்தும் வகையில் வாடகைக்கு பெற்றுள்ளனர். பொலிஸார் தேடுதல் நடத்திய சீன ஆண் வீட்டில் இருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

யுவதிகள் 5,000 முதல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட யுவதிகள், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

Latest Offers