வட்டுவாகல் மீனவர் மீது கடற்படையினர் கல்வீச்சு தாக்குதல்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு, வட்டுவாகல் கடல் ஏரியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது கடற்படையினர் இன்று கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட்டுவாகல் பகுதியில் இன்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் கடற்படை முகாம் வழியாக கடல் ஏரிப்பக்கம் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது கடற்படையினர் ஒருவர் மீனவர்களை தீய வார்த்தைகளினால் திட்டியதுடன் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.