களுவாஞ்சிக்குடியில் மூன்று பிள்ளைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை

Report Print Nesan Nesan in சமூகம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடியில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் தனது இல்லத்தில் உள்ள கடையில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தேற்றாத்தீவு பகுதியைச் சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க செல்வரட்ணம் ஶ்ரீகலா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயாரான குறித்த பெண் குடும்ப வறுமை காரணமாக வீட்டில் சிறு கடை ஒன்றை நடாத்தி வந்துள்ளார்.

பெண்ணின் கணவன் வேலை நிமித்தம் கொழும்பிற்கு சென்றுள்ள சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பெருங்குற்றப் பிரிவினர் முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers