திருகோணமலையில் இரும்புகளை திருடிய இருவருக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலையில் அமைந்துள்ள பெற்றோலிய நிறுவனத்திற்கு சொந்தமான 400 கிலோ இரும்புகளை திருடிய இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் குறித்த நபர்களை இன்று ஆஜர்படுத்திய போதே நீதவான் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சமன்புர, சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 28 வயதுடைய இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் இணைந்து, பெற்றோலிய நிறுவனத்திற்கு சொந்தமான 400 கிலோ இரும்பு பட்டங்களை திருடி முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்ற போது, பொலிஸார் முச்சக்கர வண்டியை நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போதே திருடிய இரும்புகளுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Latest Offers