கம்பரலிய திட்டத்தின் அபிவிருத்தி வேலைகள் பற்றிய மீளாய்வு கூட்டம்!

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேசத்தில் கம்பெரலிய திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைகள் பற்றிய மீளாய்வு கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டம் இன்று பகல் கண்டாவளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சிபாரிசுக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் கமபெரலிய திட்டத்தின் கீழ் நூறு மில்லியன் ரூபா செலவில் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூனகரி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த அடிப்படையில் கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 19.5 மில்லியன் ரூபா செலவில் 14 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வேலைகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளர் ரீ. பிருந்தாகரன் தலைமையில் நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers