முல்லைத்தீவில் மீட்கப்பட்ட வெடிகுண்டுகள் பாதுகாப்பாக அழிப்பு!

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்க்கப்பட்ட அபாயகரமான வெடிபொருட்கள் சில இன்று வட்டுவாகல் பகுதி அதிரடிப்படையினர் தாக்கி அழித்துள்ளனர்.

இறுதி யுத்தத்தின் போதும் அதற்கு முன்னரும் இருதரப்புக்களினாலும் கைவிடப்பட்ட அபாயகரமான வெடிபொருட்கள் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் இருந்து அண்மை நாட்களில முல்லைத்தீவில் மீட்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய், புதுக்குடியிருப்பு, விசுவமடு, உள்ளிட்ட பகுதிகளில் காணப்பட்ட அபாயகரமான வெடிபொருட்கள் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அதிரடிப்படையினரர் மீட்டிருந்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட அபாயகரமான ஒரு தொகுதி வெடிபொருட்கள் இன்று வட்டுவாகல் அதிரடிப்படையினர் முகாமில் பாதுகாப்பான முறையில் தாக்கி அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers