குடும்ப தகராறு காரணமாக மூன்று பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த சோகம்

Report Print Nesan Nesan in சமூகம்

மட்டக்களப்பு - தேத்தாத்தீவு பகுதியில் குடும்ப தகராறு காரணமாக பெண்ணொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதி தேத்தாத்தீவு பகுதியைச் சேர்ந்த செல்வரட்ணம் ஶ்ரீகலா என்ற 36 வயது மதிக்கத்தக்க மூன்று பிள்ளைகளின் தாயாரே இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் அவரது வீட்டில் சிறு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவரது கணவன் வேலை நிமித்தம் கொழும்பு சென்றுள்ள சந்தர்ப்பத்திலேயே அந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பெருங்குற்றப் பிரிவினர் முன்னெடுத்து வருவதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.