நிலாவெளி புறாத்தீவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, நிலாவி கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு காரணமாக, திருகோணமலை – புறாத்தீவு தேசிய பூங்கா மூடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு நிமித்தம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சில நாட்களுக்கு புறாத்தீவு தேசிய பூங்கா மூடப்பட்டிருக்கும் எனவும் வனஜீவராசிகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கடல் கொந்தளிப்பு வழமைக்குத் திரும்பியதன் பின்னர் புறாத்தீவு தேசியபூங்கா மீண்டும் மக்கள் பாவனைக்குத் திறந்து விடப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் நாளை முதல் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை காலை முதல் கடும் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் வானிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Latest Offers