எம்மோடு இணைந்து பணியாற்ற கூடியவர்களை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்: ப.சத்தியலிங்கம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

தேவைகள் நிறைந்த எமது பகுதி மக்களின் நிலமையை கருத்தில் கொண்டு எம்மோடு இணைந்து பணியாற்ற கூடியவர்களை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

போர் முடிவடைந்த பின்னர் 2015ம் ஆண்டு நடைபெற்றதேர்தலில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருந்தார். இதனால் மக்கள் மத்தியில் ஒருவித சந்தோசம் நிலயிவியிருந்தது.

அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று சிறுபான்மை மக்கள் நம்பியிருந்தனர்.

ஏனெனில் தேசிய கட்சிகள் இரண்டும் இணைந்து ஆட்சியமைத்தமையினால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையே அந்த சந்தோசத்திற்கு காரணமாக இருந்தது.

அது கடந்த26ம் திகதியுடன் இல்லாமல் செய்யபட்டது. உலகிலேயே அமைச்சரவை இல்லாத அமைச்சர்கள் இல்லாத ஒரு அரசாங்கத்தை இலங்கை வரலாற்றில் உருவாக்கிவிட்டார்கள்.

இது துரதிஸ்டவசமானது. அரசியல் ரீதியாக சிறுபான்மை தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.

அது இன்று கேள்விக்குறியாகியுள்ளது. சிறுபான்மை மக்களுக்கு அரசியல் ரீதியாக விழுந்த பாரிய அடியாகவும் ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருந்தது.

தற்போது புதிய பிரதமர் பதவி ஏற்றுள்ளார். அமைச்சரவையும் பதவி ஏற்கவுள்ளது. எனவே தேவைகள் நிறைந்த எமது பகுதி மக்களின் நிலமையை கருத்தில் கொண்டு எம்மோடு இணைந்து பணியாற்ற கூடியவர்களை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்.

மகிந்த பதவி ஏற்றவுடன் வவுனியாவில் வெடி கொழுத்தியவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். வீடுவீடாக சென்று விண்ணப்படிவங்களை கொடுத்தனர்.

வீட்டுத்திட்டம் தருவதாக விண்ணப்பங்களை நிரப்பினர். அவர்களின் கதை தற்போது முடிவடைந்துள்ளது. ஒரு கிழமை அமைச்சர்கள் எல்லாம் தற்போது போய்விட்டனர்.

அரசியல் தீர்வு கிடைக்கும் வரைக்கும் அபிவிருத்தி தேவையில்லை என்றுகூறிவிட்டு நாங்கள் இருக்கமுடியாது. எமது முன்னாள் முதலமைச்சர் அதனை தான் கூறுகின்றார்.

என்னை பொறுத்தவரை இரண்டுமே முக்கியம். இல்லாவிடில் இங்கு அரசியல்தீர்வு கிடைக்கும் முன்னர் அபிவிருத்தி இல்லாமல் மக்கள் தமது பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து விடும் நிலை இருக்கின்றது.

எனவே அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அபிவிருத்தியானது சுகாதாரம், கல்வி என அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றார்.

Latest Offers