மேல் மாகாண முதலமைச்சருக்கு எதிராக முறைபாடு!

Report Print Gokulan Gokulan in சமூகம்

மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்ரியவிற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைபாட்டினை இலங்கை ஆசிரியர் சங்கம் பதிவு செய்துள்ளது.

சுற்று நிரூபத்தை மீறும் வகையில், அடுத்த வருடத்திற்காக பிரபல பாடசாலைகளில் மாணவர்களை இணைத்து கொள்வதற்கான ஆலோசனைகள் மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிவினால் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று இசுர தேவப்ரியவை தொடர்பு கொண்டு கேள்வியெழுப்பியுள்ளது.

அதற்கு பதிலளித்த அவர்,

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொள்ளும் சுற்றுநிரூபம் காரணமாக பாதிக்கப்படும் தமது மாகாணத்தை சேர்ந்த மாணவர்கள் சார்பில் தானே மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers