பாழடைந்த வீடொன்றிற்குள் இளைஞர்கள் செய்த மோசமான செயல்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - தேக்கவத்தை பகுதியில் ஹெரோயினுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் சிறப்பு போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றுள்ளது.

சிறப்பு போதை ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியிலுள்ள பாழடைந்த வீடு ஒன்றில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஹெரோயினை பயன்படுத்துவதற்கு தயார் நிலையில் இருந்த 5 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் வவுனியாவை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கைதுசெய்யபட்டதுடன் அவர்களிடமிருந்து சில ஹெரோயின் பொதிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் கைதுசெய்யபட்டவர்கள் நாளையதினம் நீதி மன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

Latest Offers