துடிப்பு மிக்க இளம் குருவானவரை இழந்து தவிக்கும் மட்டக்களப்பு சமூகம்!

Report Print Dias Dias in சமூகம்

மட்டக்களப்பில் இரத்தப் புடையன் பாம்புக் கடிக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அருட் தந்தை செற்றிக் ஜூட் ஒக்கர்ஸ் இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாம்புக் கடிக்கு இலக்காகி வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், இன்று சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். அவரின் பிரிவு அவரது குடும்பத்திற்கு மட்டும் இல்லை ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் பாரிய வடுவாக உள்ளது.

அமைதியான குடும்பத்தில் இருந்து வந்த அருட் தந்தை செற்றிக் ஜூட் ஒக்கர்ஸின் சேவை இரண்டு வருடங்களில் முடிவு பெற்று விட்டது.

மட்டக்களப்பில் அவரின் சேவை சிறிது காலத்தில் முற்று பெற்று விட்டாலும், தமிழர்களுக்கும், ஏழை குழந்தைகளுக்கும் அவர் ஆற்றிய சேவைகள் என்றும் மனதை விட்டு அகலாதவை.

இதேவேளை, அவரது பிரிவால் அவரது தாய், சகோதரர்கள், உறவினர், நண்பர்கள், மட்டக்களப்பு மறைமாவட்ட துறவிகள், குருக்கள் மட்டும் இல்லை ஒட்டு மொத்த தமிழர்களும் ஆழ்ந்த துயரத்தில் இருக்கின்றனர்.

இவருடைய இறுதிச்சடங்கு எதிவரும் வெள்ளிக்கிழமை (21.12.2018) மாலை 3 மணிக்கு புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், யுத்தத்தினால் கடுமையாக பாத்திக்கப்பட்ட புல்லுமலை மற்றும் ஆய்தியமலை போன்ற பகுதியில் உள்ள மக்களுக்கு இவர் ஆற்றிய சேவை காலத்தால் அழியாதவை. அது மட்டும் இன்றி, அப்பகுதியில் உள்ள ஆலயங்கள் மீதும் அதிக பற்று கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.