சாரதிகளுக்கு இடையில் மோதல்! ஒருவர் அடித்து கொலை

Report Print Murali Murali in சமூகம்

தனியார் மற்றும் அரச பேருந்து சாரதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக வெலிமட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் வெலிமட பொரலாந்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

நேர அட்டவணை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதை தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 49 வயதான தனியார் பேருந்தின் சாரதி ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் அரச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களையும் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், கைது செய்யப்பட்ட நால்வரையும் நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளனர்.