பன்றி இறைச்சி கொண்டு சென்ற இருவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை கந்தளாய் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பன்றி இறைச்சி பதின்மூன்றரை கிலோவை கொண்டு சென்ற இருவருக்கு நாற்பதாயிரம் ரூபாய் சரீரப்பிணையில் செல்லுமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க இன்று உத்தரவிட்டார்.

அக்போபுர பகுதியைச் சேர்ந்த 25,மற்றும் 31 வயதுடைய இருவருக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் கந்தளாயில் இருந்து அக்போபுர பகுதிக்கு அனுமதிப்பத்திரமின்றி பதின்மூன்றரை கிலோ பன்றியை கொண்டு சென்ற போதே இருவரை கைது பொலிஸார் சந்தேக நபர்களை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே பிணை வழங்கி உத்தரவிட்டார்.