தேசியக்கொடியுடன் முச்சக்கரவண்டியில் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

Report Print Theesan in சமூகம்

வவுனியா, நகரசபை பூங்கா வீதியில் இன்று மாலை இலங்கையின் தேசியக் கொடியுடன் முச்சக்கரவண்டியில் அதிவேகமாக சென்ற இளைஞர்களை பொலிஸார் துரத்திப் பிடித்து நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

வவுனியா நகரசபைக்கு அருகே வழமை போன்று கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார், முச்சக்கரவண்டி அதிவேகமாக செல்வதை அவதானித்து மறித்துள்ளனர்.

எனினும், பொலிஸாரின் சைகையினை கருத்தில் கொள்ளாது முச்சக்கரவண்டி அதிவேகமாக சென்றுள்ளது.

முச்சக்கரவண்டியை பின் தொடர்ந்த பொலிஸார் நகரசபை பூங்காவிற்கு அருகே மடக்கிப் பிடித்தனர்.

பொலிஸாரின் சைகையினை கருத்தில் கொள்ளாது அதிவேகமாக சென்றமை, முச்சக்கரவண்டியின் பின்புறமாக இலங்கையின் தேசியக் கொடியினை அநாகரிகமான முறையில் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

முச்சக்கரவண்டியின் பின்புறமாக அநாகரிகமான முறையில் காணப்பட்ட இலங்கையின் தேசியக் கொடியினை சீரான முறையில் வைக்குமாறு பொலிஸார் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க முச்சக்கரவண்டியில் பயணித்த இளைஞர் தேசியக் கொடியினை சீரான முறையில் மாற்றினர்.