முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய மோட்டார் சைக்கிள்! பொலிஸார் தீவிர விசாரணை

Report Print Manju in சமூகம்

முல்லைத்தீவு கடற்கரையில் மோட்டார் சைக்கிள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மீனவர்கள் கரை ஒதுங்கிய மோட்டார் சைக்கிளை நேற்று மாலை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதன் பின்னர் பொலிஸார் மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளின் உரிமையாளரைக் கண்டுபிடிப்பதற்கு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.