அனுராதபுரம் பகுதியில் போதைப் பாவனை! இராணுவ சிப்பாய் உட்பட நால்வர் கைது

Report Print Mubarak in சமூகம்

அனுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவள உத்தர விஹாரைக்கு அருகாமையிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் போதைப் பாவனையில் ஈடுபட்டு வந்த இராணுவ சிப்பாய் உட்பட நால்வரை இன்று கைது செய்துள்ளதாக எப்பாவள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலாலி பிரதேச இராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றி வரும் இராணுவ சிப்பாய் உட்பட அவரின் நண்பர்கள் மூவரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் அனுராதபுரம், எப்பாவல மற்றும் கஹட்டகஸ்திலிப பகுதியைச் சேர்ந்த 24, 26 மற்றும் 28 வயதுடையேரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான இராணுவ சிப்பாய் உட்பட நால்வரும் எப்பாவள உத்தர விஹாரைக்கு அருகாமையில் போதைப் பாவனையில் ஈடுபட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்யும் போது நூறு மில்லி கிராம் போதைப்பொருளையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எப்பாவள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஜி.பி.ரோகன அதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.