உண்ணாவிரதத்தில் ஈடுபடும் தமிழர்களின் உடல் நிலை பாதிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டைப் புகையிரத நிலையத்திற்கு முன்பாக மூன்று இளைஞர்கள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்துள்ளது.

மலையக இளைஞர்கள் இருவர் ஒன்றிணைந்து கடந்த செவ்வாய்கிழமை கொழும்பு கோட்டைப் புகையிரத நிலையத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

குறித்த போராட்டம் தொடர்பாக தெரியவருதாவது,

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அற்றுவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலையகத் தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனக்கோரி மலையக மக்களால் ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தப் போராட்டம் என்பன முன்னெடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் தோட்டத்தொழிலாளர்களுக்கான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

தலவாக்கலையைச் சேர்ந்த கணேஷன் உதயகுமார், கந்தையா அஷோக்குமார் ஆகிய இரு இளைஞர்கள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று புதன்கிழமை கனகரத்தினம் ராஜா என்பவர் மூன்றாவது நபராக இணைந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டக்காரர்களுக்கான கூடாரம் அமைப்பதற்கு முற்பட்ட வேளையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களையும், ஆதரவாளர்களையும் அங்கிருந்து அகற்றுவதற்கு பொலிஸார் முயற்சித்துள்ளனர். இதனையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.