தனிமையில் இருந்த நபருக்கு பாம்பினால் நேர்ந்த விபரீதம்!

Report Print Theesan in சமூகம்

வவுனியா - பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிராமனாளங்குளம் பகுதியில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியை சேர்ந்த பசுபதி (வயது 65) என்ற முதியவரே இன்று அதிகாலை மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தினை அடுத்து குறித்த நபர் அயலவர்களின் உதவியுடன் பூவரசங்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்லும் போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

குறித்த மரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.