ஒரு லட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில்

Report Print Nivetha in சமூகம்

ஒரு லட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற மேலதிக படை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகரை ஜனவரி 2 ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சேவை தடை விதிக்கப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர் ஒருவரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள தான் பரிந்துரை செய்வதாக தெரிவித்து, ஒன்றரை இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொள்ள முயற்சித்த போதே குறித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதனால் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.