வெள்ள அனர்த்தத்தின் காரணமாக வவுனியாவில் 132 குடும்பங்களை சேர்ந்த 455 பேர் பாதிப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் வெள்ளம் காரணமாக 132 குடும்பங்களை சேர்ந்த 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு பிரதேச செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேர் , கனகராயன்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 5 குடும்பங்களை சேர்ந்த 22 பேர், நைனாமடு கிராம அலுவலர் பிரிவில் 11 குடும்பங்களை சேர்ந்த 31 பேர்,

மன்னகுளம் கிராம அலுவலர் பிரிவில் 25 குடும்பங்களை சேர்ந்த 89 பேர், மாறா இலுப்பை கிராம அலுவலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர், வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் 18 குடும்பங்களை சேர்ந்த 70 பேர், கற்குளம் கிராம அலுவலர் பிரிவில் 19 குடும்பங்களை சேர்ந்த 48 பேர்,

கனகராயன் குளம் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் 17 குடும்பங்களை சேர்ந்த 52 பேருமாக மொத்தம் 132 குடும்பங்களை சேர்ந்த 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 17 குடும்பங்களை சேர்ந்த 46 அங்கத்தவர்கள் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த பகுதிகளில் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், கால்நடைகள் பல வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளன. பல சொத்திழப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers