இலங்கையில் ஆழிப்பேரலை ஏற்படுத்திய அவலம்! யாழில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி

Report Print Sumi in சமூகம்

இலங்கையை தாக்கிய சுனாமி ஆழிப்பேரலையின் 14ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உயிர் நீத்த உறவுகளுக்கு இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில், அனர்த்த முகாமைத்துவ இணைப்பு அலகின் பிரதி பணிப்பாளர் ரவி சங்கரப்பிள்ளை தலைமையில் இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தேசிய கொடியினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.

தொடர்ந்து 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் பின்னர் தேசிய பாதுகாப்பு தினம் தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வுகளும் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் மத தலைவர்கள், முப்படை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Latest Offers