மன்னாரில் சுனாமி நினைவு தின நினைவேந்தல் நிகழ்வு

Report Print Ashik in சமூகம்

சுனாமி பேரலை ஏற்பட்டு 14ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் இன்று நினைவு கூரல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சுனாமியில் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மன்னார் தேசிய பாதுகாப்பு தினத்தின் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இது மன்னார் - பள்ளிமுனை லூசியா மகா வித்தியாலய பாடசாலையில் இன்று காலை 9.25 மணியளவில் மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

இதன்போது ஆழிப்பேரலையின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து உயிர் நீத்த மக்களுக்காக சர்வமத பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

இதில் சர்வ மத தலைவர்கள், மன்னார் மேலதிக அரசாங்க அதிபர், மன்னார் பிரதேச செயலாளர் சிவசம்பு, மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் திலீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...