60,000 ரூபாய் பணத்தினை திருடிய நபருக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - மட்கோ பகுதியில் கடையொன்றினை உடைத்து 60,000 ரூபாய் பணத்தினை திருடிய நபரை இம்மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமீலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் குறித்த நபரை இன்று ஆஜர்படுத்திய போதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை, சுமேதகம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் திருகோணமலை மட்கோ பகுதியிலுள்ள சில்லறைக் கடையொன்றினை உடைத்து 60,000 ரூபாய் பணம் மற்றும் கடையிலுள்ள பொருட்களை திருடியுள்ளார்.

இந்நிலையில் பொலிஸார், குறித்த கடையொன்றிற்கு அருகிலுள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமரா ஊடாக சந்தேக நபரை இனங்கண்டு கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Latest Offers