நாமலை கண்டு மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற தமிழர்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கடந்த சில நாட்களாக பெய்த அடை மழை காரணமாக கடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நாமல் ராஜபக்ச பார்வையிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச நேற்றைய தினம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காகவும் அனர்த்தத்தால் விளைந்துள்ள பாதிப்புக்களை அறியவும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்திருந்தார்.

இதன் போது அவர் தான் ஒரு முன்னாள் ஜனாதிபதியின் மகன் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதையும் மறந்து, மக்களோடு மக்களாக சகஜமாக பழகியமை அப்பிரதேச மக்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.

அத்தோடு சிறு பிள்ளைகளுடன் செல்பி எடுத்து, குழந்தைகளை தூக்கி கொஞ்சியுள்ளார். இது அப் பிரதேச மக்களை வியப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பெரும் மகிழ்ச்சி அடைய வழிவகுத்துள்ளது.

நாமல் கறி சமைப்பவர்களுடன் கதைத்து கறி சுவை பார்ப்பதும், மக்களுடன் சுமூகமாக பழகுவதும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

நாமல் இந்த சமூகத்தோடு கொண்டுள்ள அன்பையையும் அக்கறையையும் அவருடைய செயற்பாடுகள் மூலம் தெரிய வருவதை காணக்கூடியதாக உள்ளது.


Latest Offers