சுனாமியின் 14 ஆவது தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் - 2018

Report Print Gokulan Gokulan in சமூகம்

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். முஹம்மட் கனியின் தலைமையில் சுனாமி அனர்த்த தினமான இன்று கிண்ணியா சிறுவர் பூங்காவில் வைத்து இரு நிமிட மௌன அஞ்சலி இடம்பெற்றுள்ளது. சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் கடந்து செல்கின்றது.

இதன் நிகழ்வாக மத அனுஷ்டானங்களும் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து இரு நிமிட மௌன அஞ்சலியும் இதன் போது இடம்பெற்றன.

இதில் கிண்ணியா ஜம்மியத்துல் உலாமாசபை தலைவர் ஏ.எம். ஹிதாயத்துல்லாஹ் நளீமி , கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில காலகே, கிண்ணியா பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். ரியாத் உட்பட பல அரச அதிகாரிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.