தலைமன்னார் செல்வேரி கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செல்வம் எம்.பி உதவி

Report Print Ashik in சமூகம்

தலைமன்னார் செல்வேரி கிராமத்தில் மழைவெள்ள அனர்த்தம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி பொது மண்டபத்தில் தங்கியுள்ள 28 குடும்பங்களைச் சேர்ந்த 85 நபர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது சொந்தப்பணத்தில் உலர் உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகளை இன்று வழங்கியுள்ளார் .

நாடாளுமன்ற உறுப்பினரின் பணிப்பில் இன்று அவரது பிரதி நிதிகளான தமிழீழ விடுதலை இயக்கத்தின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும் மன்னார் பிரதேச சபை உறுப்பினருமான அ.த.லுஸ்ற்ரின் (மோகன்ராஜ்) தமிழீழ விடுதலை இயக்கத்தின் மன்னார் மாவட்ட பொதுக்குழு உறுப்பினரும், மன்னார் நகரசபையின் தலைவருமான ஞா.அன்ரனிடேவிட்சன் (ஜெறாட்) மன்னார் பிரதேசசபை உறுப்பினர் அ.நிகால் கட்சியின் பிரமுகர்களான பிறேம், நிலாளன், டிக்கோனி, கண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டதோடு அப்பகுதி மக்களுடனும் உரையாடி நிலமைகளை கேட்டறிந்ததோடு உலர் உணவுப்பொருள் பொதிகளையும் வழங்கினர்.