சிவனொளிபாதமலைக்கு தரிசிக்க சென்ற 7 இளைஞர்கள் கைது

Report Print Thirumal Thirumal in சமூகம்

சிவனொளிபாதமலைக்கு தரிசிக்க சென்ற 7 இளைஞர்கள் போதைப்பொருளுடன் நேற்று ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 7 பேரும் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு பிரிவு வாகனங்களை சோதனை செய்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறை, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களை இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers