கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலமைகள் தொடர்பில் விசேட கூட்டம்!

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலமைகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலமையில் விசேட கூட்டம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலும், மக்களை பாதுகாப்பது மற்றும் முகாம்களில் தங்கி உள்ளுர் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம அருமைநாயகம் தலமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்சத்தியசீலன், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட திணைக்கள சார் அதிகாரிகள் பங்கு கொண்டனர்.

தொடர்ந்து அரசாங்க அதிபர் ஊடகங்களிற்கு அனர்த்த நிலமைகள் தொடர்பிலும், பாதிக்கப்பட்ட நிலை தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.

Latest Offers