பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் வரவு, செலவு திட்டம் நிறைவேற்றம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் வரவு, செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கொன்றினால், அதாவது தமிழ்த் தேசிய முன்னணியின் வாக்கினால் வெற்றி பெற்றுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் அமர்வு நேற்று பகல் ஆரம்பமாகியது.

பிரதேசசபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் இடம்பெற்ற அமர்வில் 2019ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாக வாசிக்கப்பட்டு வாக்கெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 06 பேரும், த.தே.முவை சேர்ந்த ஒருவரும் ஆதரவாக வாக்களித்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று சபைகளிலும் ஆட்சியமைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மை ஆதரவுடன் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...