மொரிஷியஸ் நாட்டில் விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு நினைவுத் தூபி

Report Print Kamel Kamel in சமூகம்

மொரிஷியஸ் அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு புலம்பெயர் சமூகத்திற்கு நிதி உதவி வழங்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள மொரிஷியஸ் தூதரகத்தின் ஊடாக இவ்வாறு புலி ஆதரவு தரப்பிற்கு மொரிஷியஸ் அரசாங்கம் நிதி உதவி வழங்கி வருவதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

உயிரிழந்த விடுதலைப் புலி தலைவர்களை நினைவு கூர்வதற்காக நினைவுத் தூபி ஒன்றை அமைப்பதற்கு மொரிஷியஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்துக்கான மொரிஷியஸ் தூதுவருக்கும், புலம்பெயர் விடுதலைப் புலி தலைவர் ஒருவருக்கும் இடையில் மனித உரிமைப் பேரவையில் சந்திப்பு நடத்தப்பட்டமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடுதலைப் புலித் தலைவர் பற்றிய விபரங்கள் புலனாய்வுப் பிரிவினருக்கும் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிங்கள பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers