வவுனியாவில் மழை காரணமாக நெற்செய்கைகள் அழிவு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வந்த மழையால் 3,588.75 ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் இ.விஜயகுமார் நேற்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் 48,902 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்த நிலையில் தற்போது 48,914 ஏக்கர் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய நீர்ப்பாசனத்திற்கு உட்பட்ட குளங்களில் 6,529 ஏக்கர் நிலப்பரப்பிலும், மாகாண நீர்பாசன திணைக்களத்தின் கீழான நடுத்தர குளங்களின் கீழ் 5,585 ஏக்கரும், எமது திணைக்களத்திற்கு உட்பட்ட 661 குளங்களில் 29,800 ஏக்கரும், மானாவாரி அடிப்படையில் 7000 ஏக்கரும் என மொத்தமாக 47,914 ஏக்கர் நெற்பயிர் செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இதுவரைக்கும் 29,895 ஏக்கருக்கு விவசாயிகள் உரமானியத்தை பெற்றுள்ளார்கள்.

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இதுவரை 3588.75 ஏக்கர் அழிவடைந்துள்ளது. இதில் 90 வீதமான காணிகள் வவுனியா வடக்கு பிரதேசத்தில் அழிவடைந்துள்ளது. அதேபோன்று யானையினால் 17 ஏக்கர் அழிவுக்கு உட்பட்டுள்ளது.

உழுந்து பயிர்செய்கையில் 150 ஏக்கர் வெள்ளத்தினால் அழிவடைந்துள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை திரட்டி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers