கிழக்கு மாகாண விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கும் விழா

Report Print Gokulan Gokulan in சமூகம்

44ஆவது தேசிய விளையாட்டு நிகழ்வில் வெற்றி பெற்று கிழக்கு மாகாணத்துக்கு பெருமை சேர்ந்த விளையாட்டு வீர, வீராங்கனைகளை கௌரவிக்கும் முகமாக விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது.

திருகோணமலை, கடற்படை கிழக்கு பிராந்தியத்தில் நேற்று கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இவ்விழா இடம்பெற்றுள்ளது.

இவ் விருது வழங்கும் விழா மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் தலைமையில் மாகாண விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துபண்டாவின் வழிகாட்டலில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம மற்றும் அவரது பாரியார் தீப்தி போகொல்லாகம ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன் வீர, வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கினர்.

இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம மற்றும் அவரது பாரியார் தீப்தி போகொல்லாகம ஆகியோருக்கு கிழக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளர் என்.எம்.நௌபீஸூனால் நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

திணைக்களத் தலைவர்கள், மாகாண அமைச்சின் செயலாளர்கள், அரச உயர் அதிகாரிகள் மற்றும் வீர, வீராங்கனைகள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.