திருகோணமலை பகுதியில் விபத்து: மூவர் வைத்தியசாலையில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் சந்தை பகுதியில் விபத்திற்கு இலக்காகிய மூவர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வான் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த மூவர் மீது மோதியமையினாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை வான் சாரதி மதுபோதையில் வாகனம் செலுத்தியமையே விபத்திற்கான காரணம் என தெரியவருகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் கந்தளாய் பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.