யுவதியை காப்பாற்ற முயற்சித்த இளைஞனுக்கு நேர்ந்த நிலைமை

Report Print Steephen Steephen in சமூகம்

காலி நகரில் யுவதி ஒருவரை கடத்திச் செல்ல முயற்சித்த போது, யுவதியை காப்பாற்ற முன்வந்த இளைஞர் கத்திக் குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் நடைபெற்றுள்ளது.

கத்திக் குத்துக்கு இலக்கான இளைஞனின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

யுவதி காலி நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தொழில் புரிந்து வருகிறார்.

இன்று முற்பகல் வர்த்தக நிலையத்திற்கு வந்த நேரத்தில் முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் யுவதியை கடத்திச் செல்ல முயற்சித்துள்ளார்.

அப்போது வர்த்தக நிலையத்தில் தொழில் புரியும் இளைஞன், யுவதியை காப்பற்ற முயற்சித்த போது, முச்சக்கர வண்டியில் வந்த நபர், இளைஞனை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

காதல் விவகாரம் காரணமாக இந்த கடத்தல் முயற்சி நடந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை தாம் கைதுசெய்துள்ளதாகவும் காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.