குளித்துக் கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கிப் பலி

Report Print Dias Dias in சமூகம்

கிளிநொச்சியில் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த 11 வயதுடைய சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி, இரத்தினபுரத்தை சேர்ந்த சி.அன்பழகன் எனப்படும் சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தரம் 6இல் கல்வி கற்கும் மாணவன் என தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கிளிநொச்சி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினத்திலிருந்து மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பியிருந்தனர்.

இந்நிலையில் இச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.