நாளை வெளிவரவுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

Report Print Malar in சமூகம்

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை நாளை வெளியிட எதிர்ப்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றிருந்ததுடன் அதில் 321,469 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.