கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் குடும்பங்களிற்கு பொதிகள் வழங்கும் நிகழ்வு

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் 100 குடும்பங்களிற்கு அதியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள மக்கள் நலன் காப்பகத்தின் ஒழுங்கு படுத்தலில், வடமாகாண முன்னாள் முதல்வர் சி.வி விக்னேஸ்வரனின் ஏற்பாட்டில் இந்த பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் சி.வி விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன், அருந்தவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களிற்கு உதவி பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் சி.வி விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தின் போது இலங்கையில் நீதித்துறை சிறப்பாக இயங்குகின்றது என்பதை காண முடிகின்றது என்பதுடன் அதற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை அவ்வாறான நீதி மன்றங்களின் ஊடாக இடம்பெற்ற யுத்த குற்றங்கள் உள்ளிட்ட விடயங்களையும் ஆராய்ந்து தீர்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். தற்போது படையினர் மக்களிற்கு உதவி வருகின்றனர்.

இவ்வாறு படையினர் உதவுவதன் ஊடாக ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமை அமர்வில் தம்மை பாதுகாக்க முயல்கின்றனர்.

தாம் மக்களிற்கு சேவை செய்வது போன்றும், தம்மை காண்பிக்கவே இவ்வாறு படையினர் செயற்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை பலர் மக்களிற்கு பல உதவிகளை சென்றடைய விடாது தமது பொக்கட்டுகளை நிறைக்கும் செயற்பாடுகளும் இடம்பெறு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.