கந்தளாய் பகுதியில் நஞ்சருந்தி இளம் பெண்ணொருவர் உயிரிழப்பு!

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் நஞ்சருந்தி இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய், ரஜஎல பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாயொருவரே இவ்வாறு பரிதாபமாக நஞ்சருந்தி இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்தும் சங்கரணி சன்சத என்ற 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

பெண்ணின் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதோடு உயிரிழந்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ளதோடு, சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.