மூன்று அரச ஊடகங்களுக்கான தலைவர்கள் நியமனம்

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையின் மூன்று அரச ஊடகங்களுக்கான தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவுடன் கலந்தாலோசனை நடத்திய பின்னரே ஜனாதிபதி இந்த நியமனங்களை வழங்கியுள்ளார்.

இதன்படி ஒக்டோபர் 26 ஆட்சிக் கவிழ்ப்பின் முன்னர் நியமிக்கப்பட்ட சரங்க விஜேரட்ன, தொடர்ந்தும் ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவராக நியமனம் பெற்றுள்ளார்.

லக்பிம செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் சம்பத் தேசப்பிரியம், எசோசியேட்டர் நியூஸ்பேப்பர் நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐடிஎன் நிறுவன தலைவராக ரசங்க ஹரிஸ்சந்திர நியமனம் பெற்றுள்ளார்.

இவர், 2015க்கு முன்னர் மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் ஐடிஎன்னின் தலைவராக செயற்பட்டவராவார்.