இராகலையில் இடம்பெற்ற பக்திபூர்வமான ஐயப்ப பஜனை மற்றும் மஹா குருபூஜை

Report Print Gokulan Gokulan in சமூகம்

இராகலை ஸ்ரீ சபரி யாத்திரை குழுவினரின் ஐயப்ப பஜனையும் மஹா குருபூஜை மற்றும் சக்தி பூஜை ஆகியன இன்றைய தினம் வெகு பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளன.

இராகலை ஸ்ரீ பச்சதண்ணி மாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற குறித்த பூஜை வழிபாடுகள் நாளைய தினமும் இடம்பெறவுள்ளன.

விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், மகா கணபதி ஹோமம், குருயாகம் ஐயப்ப ஹோமத்தை தொடர்ந்து 108 அஸ்டோத்திர சத சங்காபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் ஐயப்பன் ஆனந்தமிகு பஜனை போன்றன இன்றைய வழிபாடுகளில் இடம்பெற்றன.

தொடர்ந்து, நாளைய தினம் பிள்ளையார் பூஜை, வந்தமண்டப பூஜை, பஞ்சமுகநாம அர்ச்சனை, தீபாராதனை தொடர்ந்து சுாவமி ஐயப்பனின் கஜ வாகன ஊர்வலம் இடம்பெறவுள்ளது.

ஆலய குருக்கள், சிவஸ்ரீ சிவராஜா தலைமையில் இடம்பெறும் குறித்த பூஜை நிகழ்வுகளில் இலண்டனில் இருந்து பிரேம்குமார்(பிரேம் சாமி) கலந்து கொள்ளவுள்ளார்.

Latest Offers