முள்ளிப்பொத்தானை பகுதியில் வாகன விபத்து!

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - முள்ளிப்பொத்தானை 96ஆம் கட்டைப் பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி வடிகாணுக்குள் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த ஹாபிஸ் அகமட் என்ற 25 வயதுடைய நபரே இவ்வாறு காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் தம்பலாகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முள்ளிப்பொத்தானை பகுதியிலிருந்து கார் ஒன்றில் சட்டத்தரணியொருவர் தனது குடும்பத்தோடு குருணாகலைக்குச் செல்லும் போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்பொண்டு வருவதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.