முல்லைத்தீவு பிலக்குடியிருப்பு கிராம மக்களின் கோரிக்கை!

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட பிலக்குடியிருப்பு கிராமத்தை, அரச அதிகாரிகள் இதுவரை வந்து பார்வையிடவில்லை என அந்தப்பகுதி மக்கள் இன்று கவலை தெரிவித்துள்ளனர்.

8 வருடங்களுக்கு மேலாக இலங்கை விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த கிராமம் கடந்த ஆண்டு முற்பகுதியில் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்தக் கிராமத்தில் மீள்குடியேறிய மக்கள் சொந்த முயற்சியில் தமது தோட்டக்காணிகளை துப்பரவு செய்து வாழ்வாதாரப் பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டுள்ளனர். சிலர் கால்நடை பண்ணைகளையும் அமைத்து தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் முல்லைத்தீவில் அண்மையில் ஏற்பட்ட மழைவெள்ளம் காரணமாக பிலக்குடியிருப்பு கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளின் வாழ்வாதரப் பயிர்செய்கைகளும் கால்நடைப் பண்ணையாளர்கள் உள்ளிட்டோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தற்பொழுது பெரும் பொருளாதார நெருக்கடியினை சந்தித்துள்ள பிலக்குடியிருப்பு கிராம மக்கள் அரச அதிகாரிகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் எதுவும் இதுவரை வந்து பார்வையிடவில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தமது கிராமத்தை நேரில் வந்து பார்வையிட்டு மீண்டும் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப உதவி செய்யவேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.