மட்டக்களப்பில் இறை ஆராதனையுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள்

Report Print Kumar in சமூகம்

2019ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையில் நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலங்களில் நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்றதுடன், திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பிறந்திருக்கும் ஆண்டு புதிய நம்பிக்கையினை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் மட்டக்களப்பு, புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் புதுவருட ஆராதனைகள் நேற்று நள்ளிரவு நடைபெற்றுள்ளன.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் நடைபெற்ற இந்த ஆராதனையில் ஆலயத்தின் பங்கு தந்தை அன்னதாஸ் அடிகளார், மறைக்கோட்ட முதல்வர் ஏ.ஜேசுதாசன் அடிகளார் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இந்த விசேட திருப்பலி பூஜையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் உட்பட பெருமளவான பக்தர்களும் கலந்து கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டதுடன் விசேட ஆராதனைகளும் நடைபெற்றன.

Latest Offers