தமிழர் தலைநகரில் நீதிபதி இளஞ்செழியன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

தமிழர் தலைநகரான திருகோணமலையில் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் தலைமையில் இன்று சத்திய பிரமாணம் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அரச நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம் மலர்ந்துள்ள 2019ஆம் ஆண்டின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று காலை 8.45 மணியளவில் திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, மேலதிக நீதவான் சமீனாகுமாரி ரத்னாயக்க மற்றும் திருகோணமலை மாவட்ட நீதிபதி எம்.பீ.முஹைதீன் ஆகியோர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அத்துடன் திருகோணமலை நீதிமன்ற கட்டட தொகுதியில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்களும் இந்த சத்திய பிரமாண நிகழ்வில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும், இந்த நிகழ்வை முன்னிட்டு சுமார் 15 நிமிடங்கள் வரையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers