பொலிஸாரின் செயற்பாட்டால் குளத்தில் விழுந்த நபருக்கு நேர்ந்த கதி

Report Print Theesan in சமூகம்

வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் செயலினால் குளத்தில் விழுந்த நபர் நேற்று காலை வீடு திரும்பிய நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நகரத்தில் அமைந்துள்ள மதுபான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் இருவர் மது அருந்திவிட்டு மோட்டார்சைக்கிளில் பயணித்துள்ளனர்.

இருவரும் மதுபோதையில் பயணிப்பதனை அவதானித்த போக்குவரத்து பொலிஸார் அவர்களை மறித்துள்ளனர்.

எனினும், குறித்த இருவரும் பொலிஸாரின் கட்டளையை தாண்டி முன்னோக்கி பயணித்ததன் காரணமாக அவர்களை பொலிஸார் துரத்தி சென்றுள்ளனர்.

அதன் பின்னர் குடியிருப்பு குளக்கட்டில் குறித்த இளைஞர்கள் பயணிக்கும் போது பொலிஸாரின் மோட்டார்சைக்கிள் அவர்கள் மீது மோதியதால் அவர்களுள் ஒருவர் குளத்திற்குள் விழுந்துள்ளார்.

மற்றைய நபர் குளக்கட்டின் மீது விழுந்த நிலையில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எனினும் குளத்திற்குள் விழுந்த நபரை மீட்கும் நடவடிக்கையில் இளைஞர்களும், பொதுமக்களும் சுமார் நான்கு மணித்தியாலயத்திற்கு மேலாக ஈடுபட்டிருந்ததாக தெரியவருகிறது.

ஆனாலும் இரவு நேரம் என்பதனால் அந்த முயற்சியும் தோல்வியடைந்துள்ளது.

குளத்தில் விழுந்த நபர் நேற்று காலையே வீடு திரும்பியுள்ள நிலையில், வவுனியா பொலிஸாரினால் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நேற்று மாலை பொலிஸார் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதன்போது எதிர்வரும் 13ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Latest Offers